வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், உ.பி., வழியாக நேபாளம் தப்பிச் செல்லாமல் இருக்க, எல்லையில் துணை ராணுவப் படையினரால் எச்சரிக்கை 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளன.
![]()
|
பஞ்சாபில் தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், சமீபத்தில் தன் கூட்டாளிகளுடன் சென்று அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார்.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
![]()
|
இந்நிலையில், அம்ரித்பால் மற்றும் இவரின் கூட்டாளிகள், நம் அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் வழியாக நேபாளம் தப்பி விடாமல் இருக்க, இங்குள்ள சாஷாஸ்திரா சீமா பால் எனப்படும் துணை ராணுவத்தினர், அம்ரித்பால் புகைப்படம் அடங்கிய போஸ்டர்களை எல்லை பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
எல்லையில் வாகனங்களை ஆய்வு செய்யும் வீரர்கள், அம்ரித் பாலின் புகைப்படத்துடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement