வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ...
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
![]()
|
கமல் கட்சி துவங்கிய போது, நாறிக் கிடக்கும் தமிழக அரசியலை துாய்மைப்படுத்த அவதாரம் எடுத்ததைப் போல, 'ஊழல்வாதிகளுடன் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்' என்று, 'பில்டப்' கொடுத்தார். இப்போது, சினிமா துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தி.மு.க.,வை ஆதரிக்கிறார் என்பது, ஊர் உலகத்திற்கு நன்றாகவே தெரியும்.
'இல்லத்தரசிகளை போற்றுவதில், தமிழகம் பிறருக்கு வழிகாட்டுகிறது' என்று கூறும் கமல் அவர்களே... குடும்பத் தலைவியருக்கு வழங்கப்படவிருக்கும் உரிமைத் தொகை எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழக ஆண்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, லட்சக்கணக்கான அப்பாவி ஏழை பெண்களின் வாழ்வை நாசமாக்கி, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில் தான், அவர்களுக்கே உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்காக, 'டாஸ்மாக்' வருமானத்தை, மேலும், ௫,௦௦௦ கோடி ரூபாய் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதையா, பிறருக்கான சிறந்த வழிகாட்டுதல் என்று பாராட்டுகிறீர்கள்? ஒருவரது கண்களை குருடாக்கி, அழகான ஓவியத்தை, அவருக்கே அன்பளிப்பாகக் கொடுத்தால், ஏற்றுக்கொள்வீரா உலகநாயகரே?
![]()
|
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால்,ஒரு ராஜ்யசபா, 'சீட்'டும், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் சீட்டும் கிடைக்கும். இதுதான், தி.மு.க.,வில் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை. இதற்காக, உங்கள் கொள்கையிலிருந்து விலகி, தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிக்க வேண்டுமா? இப்படி ஜால்ரா அடிப்பதை விட, சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே? அரசியல் எதற்கு உங்களுக்கு?
சினிமாவில் இருந்தபடியே முதல்வரை வானளாவ புகழ்ந்தால், சினிமா வாழ்க்கை மேலும் சிறப்படையும்; வருமானமும் குறையாது. அரசியல் மோகம் தீரவில்லை என்றால், மக்கள் நீதி மய்யத்தை ஓரம் கட்டி விட்டு, தி.மு.க.,வில் ஐக்கியமாகி விடுங்கள். ஒரு அமைச்சர் பதவியாவது நிச்சயம் கிடைக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement