பழநி:பழநி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மார்ச் 30 முதல் ஏப்.4 வரை காலையில் வள்ளி தெய்வசேனா முத்துக்குமாரசுவாமி தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆறாம் நாளான ஏப். 3 மாலை 5:45 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பங்குனி உத்திரதினமான ஏப்.4 அதிகாலை 4:30 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.