வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நேற்று இரவு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இம்மாநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட மத்திய சிறைகள் மற்றும் கிளை சிறைகள் உள்ளன. இங்கு 17-ம் மேற்பட்ட சிறைகளில் நேற்று போலீசார் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் ரெய்டு குறித்து குஜராத் மாநில காவல்துறை டி.ஜி.பி., விகாஷ் சகே இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, இங்குள்ள சிறைக்குள் பல்வேறு சமூக விரோத செயல்களில் கைதிகள் ஈடுபடுவதாக ரகசிய தகவல் வெளியானது.
![]()
|
இதையடுத்து மாநிலம் முழுதும் மொத்தம் 17 சிறைகளில் 1700 போலீசார் குழுவாக பிரிக்கப்பட்டு நேற்று இரவு சோதனையை துவக்கினோம். சில கைதிகளிடம், மொபைல் போன் இருந்தது அவை பறிமுதல் செய்யப்பட்டது.இன்று காலையும் சோதனை தொடரும். சிறைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது என்றார்.