சென்னை:சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., சின்னதுரை பேசியதாவது:
குடும்ப தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1,000 ரூபாய் கிடைக்காதோ என்ற அச்சம், பரவலாக ஏற்பட்டுள்ளது.
ஏழை குடும்பங்களை சேர்ந்த குடும்ப தலைவியர் அனைவருக்கும் 1,000 ரூபாய் கிடைப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது, கவலை அளிக்கிறது.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய், ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.