சென்னை:லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் நீக்கப்பட்டதை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட, சட்டசபை முன்னவரான, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''இங்கே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நேரம் கடந்தும் பேச அனுமதிக்கிறோம். ஆனால், காங்., முன்னாள் தலைவர் ராகுல், எம்.பி., பதவியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.