சென்னை:தமிழக ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா 5 கிலோ அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு அதிகபட்சம் 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு குறைந்த விலையில் அரிசி வழங்குகிறது.
கடை வாடகை, போக்குவரத்து செலவினங்களுக்காக ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கும், உணவு துறையின் நுகர்பொருள் வாணிப கழகத்துக்கும், மத்திய, மாநில அரசுகள் 'டீலர் மார்ஜின்' என்ற பெயரில் நிதி வழங்குகின்றன.
2022-23ம் நிதியாண்டுக்கு மத்திய அரசு 145.90 கோடி ரூபாய்; தமிழக அரசு145.90 கோடி ரூபாய் என 291.80 கோடி ரூபாயை கூட்டுறவு, உணவு துறைக்கு விடுவித்துள்ளன.