தேவையற்ற தொல்லை அழைப்புகளை தடுக்க டிராய் ஆலோசனை | Troy advice to prevent unwanted nuisance calls | Dinamalar

தேவையற்ற தொல்லை அழைப்புகளை தடுக்க 'டிராய்' ஆலோசனை

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (17) | |
புதுடில்லி:தேவையற்ற, தொல்லைகள் தரக்கூடிய, 'மார்க்கெட்டிங்' தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வழங்கப்படுவதை கண்டறிந்து, அதற்குரிய தீர்வுகளை உருவாக்குவது குறித்து, தொலை தொடர்பு நிறுவனங்களுடன், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' கலந்தாலோசிக்க உள்ளது. இது குறித்து டிராய் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தொலைபேசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி:தேவையற்ற, தொல்லைகள் தரக்கூடிய, 'மார்க்கெட்டிங்' தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் வழங்கப்படுவதை கண்டறிந்து, அதற்குரிய தீர்வுகளை உருவாக்குவது குறித்து, தொலை தொடர்பு நிறுவனங்களுடன், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' கலந்தாலோசிக்க உள்ளது.



latest tamil news


இது குறித்து டிராய் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொலைபேசி வாடிக்கையாளர்கள், தேவையற்ற மற்றும் தொல்லை தரக்கூடிய மார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த தொந்தரவுகளை தவிர்க்கும் விதமாக டிராய், 'தொலைதொடர்பு வணிகத் தொடர்பு வாடிக்கையாளர் விருப்ப ஒழுங்குமுறைகள் 2018' ஐ, கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் வெளியிட்டது. இது தொல்லை தரக்கூடிய, வேண்டப்படாத சந்தைப்படுத்துதல் அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்கியது.


latest tamil news


இந்த விதிமுறைகள் கடந்த 2019, பிப்ரவரி 28 முதல் அமலுக்கு வந்தது.

இதன் அடிப்படையில் யு.சி.சி., எனப்படும் விரும்பாத வணிகத் தொடர்பை கண்டறிவது. ஒழுங்குமுறைக்கு இணங்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை, தகவல்களை திருடும் முறையை தடுத்தல், விளம்பர குரல் அழைப்புகளை கண்டறியும் 'லெட்ஜர்' தொழில்நுட்ப இயங்கு தளம் உள்ளிட்ட துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து, ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு டிராய் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X