பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ஐ.எப்.ஏ., நிறுவனத்தார், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து, 25 குறும்படங்களை தயாரித்தனர். இந்த படங்கள், கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த, உலக திரைப்பட விழாவில், திரையிடப்பட்டன. அதில், சுப்பிரமணிய பாரதி என்பவர் இயக்கிய பாஞ்சாலி என்ற படம் முதல் பரிசை வென்றது.
இதில், 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, வரும் மே மாதம் பிரான்சில் நடக்க உள்ள சர்வதேச 'கேன்ஸ்' திரைப்பட விழா போட்டிக்கு அனுப்பப்பட்டன.
இதில், சாயுபும் நானும், கொடுப்பினை, சான்றோன், செங்கொடி, சரணாலயம் என்ற ஐந்து படங்கள் திரையிட தேர்வாகி உள்ளதாக, இயக்குனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.