சென்னை-கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட, பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்து, 117 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24ல் நடந்தது. இந்த தேர்வில், 18.36 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு பின், குரூப் - 4 தேர்வு முடிவுகளை, அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது.
தேர்வு முடிவு, www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியான அடுத்த சில நிமிடங்களில், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தேர்வர்கள், முடிவுகளை அறிந்து கொள்ள முற்பட்டனர்.
இதனால், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. இதனால், தேர்வர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.