அதிகம் மது குடிப்பவர் மனைவிக்கு ரூ 1000 வழங்குவதில் முன்னுரிமை: வானதி சீனிவாசன்| Rs 1000 given to wife of heavy drinker: Vanathi Srinivasan | Dinamalar

அதிகம் மது குடிப்பவர் மனைவிக்கு ரூ 1000 வழங்குவதில் முன்னுரிமை: வானதி சீனிவாசன்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (40) | |
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -எம்.எல்.ஏ., வானதி: 'தகுதி வாய்ந்த குடும்ப தலைவியருக்கு மட்டுமே 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. 'டாஸ்மாக்'கில் மது வாங்குவதற்கு 'ஆதார்' எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அதன் வாயிலாக, அதிகம் மது குடிப்பவர்களை கணக்கிட்டு, அவர்களின் மனைவியருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதில் முன்னுரிமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

பா.ஜ., -எம்.எல்.ஏ., வானதி: 'தகுதி வாய்ந்த குடும்ப தலைவியருக்கு மட்டுமே 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


'டாஸ்மாக்'கில் மது வாங்குவதற்கு 'ஆதார்' எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அதன் வாயிலாக, அதிகம் மது குடிப்பவர்களை கணக்கிட்டு, அவர்களின் மனைவியருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கலாம்.


latest tamil news


தமிழகத்தில் தான் அதிகமான இளம் விதவையர் உள்ளனர். இதற்கு மதுக் கடைகளே காரணம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில் மட்டுமல்ல, பா.ஜ., ஆளும் கர்நாடகா, உ.பி., போன்ற மாநிலங்களிலும் மது விற்பனையால், அரசுக்கு வருமானம் வருகிறது. தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்திருப்பதற்கு, விலை உயர்வே காரணம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X