மகுடேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி வழிபாடு
கொடுமுடி-சனி பெயர்ச்சியை முன்னிட்டு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், நாளை முதல் 28ம் தேதி காலை வரை, சனி பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம், லட்சார்ச்சனை நடக்கிறது. ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீன ராசியினர், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். சனி பெயர்ச்சி சிறப்பு லட்சார்ச்சனை சீட்டு கட்டணம், 100 ரூபாய் செலுத்தி, கலந்து கொள்ளலாம்.
காங்., ஆர்ப்பாட்டம்
கோபி-காங்., எம்.பி., ராகுலுக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, கோபி சட்டசபை தொகுதி காங்., கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லசாமி, நகர தலைவர் மாரிமுத்து, வட்டார தலைவர்கள் சண்முகசுந்தரம், ஜவகர்பாபு, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.