கரூர்,-கரூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், மனித சங்கிலி போராட்டம், கரூர், காமராஜர் சிலை அருகே நடந்தது.
அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி நிலுவை தொகை, ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கை கோர்த்தபடி, காமராஜர் சிலை முதல் கரூர் தாலுகா அலுவலகம் வரை வரிசையாக நின்று, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர்.
ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மணியன், பெரியசாமி, சுப்பிரமணியன், செல்வதுரை, வேலுமணி, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.