கரூர்,-தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பு சரண்டரை வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், கூடுதல் கிராம பணிக்கு, நிறுத்தப்பட்ட பொறுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பிரபு, துணை செயலாளர் தனராஜ், பொருளாளர் ராஜ்கமல் உள்பட பலர் பங்கேற்றனர்.
குளித்தலை
குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், நேற்று மாலை, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்ட தலைவர் தீபக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சிவசக்தி, பொருளாளர் அலிமா, மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துக்குமார், ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை, வலியுறுத்தி கோஷமிட்டனர்.