கரூர்,- கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த, சிக்னல் லைட்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, மண்மங்கலம் பிரிவில், பள்ளிக்கூடங்கள், ஹோட்டல்கள், டீ கடைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சிக்னல் லைட்டுகள் அமைக்கப்பட்டன. தற்போது, அவை பழுதடைந்துள்ளன.
இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, மண்மங்கலம் பிரிவு பகுதியில், பழுதடைந்துள்ள சிக்னல் லைட்டுகளை, உடனடியாக சீரமைக்க வேண்டியது அவசியம்.