வெள்ளகோவில்-வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது.
ஏலத்துக்கு, 1,043 மூட்டை வரத்தானது. இவற்றின் மொத்த எடை, 51 ஆயிரம் கிலோ விற்பனைக்கூட கண்காணிப்பாளர்
மகுடீஸ்வரன் முன்னிலையில் ஏலம் நடந்தது.
ஏலத்தில் காங்கேயம், முத்துார், நடுப்பாளையம், ஈரோடு, கொடுமுடி மற்றும் காரமடையை சேர்ந்த, 11 விவசாயிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ விதை, 42.19 ரூபாய் முதல், 51.39 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 24 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.