ஈரோடு-ஈரோடு, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லுாரியின், 28வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. தொலைக்காட்சி புகழ் மற்றும் திரைப்பட நடிகர் ஈரோடு மகேஷ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கல்லுாரி தாளாளர் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளர் முருகன், துணைத்தலைவர்கள் என்.கே.கே.பி.சத்யன், என்.கே.கே.பி.ராஜா, இணை செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளாராஜா, முதன்மை செயல்
அலுவலர் என்.கே.கே.பி.நரேன் ராஜா, நிர்வாக அலுவலர் அருள்குமரன்,
கல்லுாரி முதல்வர் காமேஷ்,
பேராசிரியர் மற்றும் மாணவர்கள், கலந்து கொண்டனர்.
கல்வி, விளையாட்டு மற்றும் கலைகளில் சிறந்த மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் மற்றும் நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.