ஈரோடு,-ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வினோத் வர்மா, 49; ஈரோடு
எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது:
நான் கெமிக்கல் வியாபாரம் செய்கிறேன். எனது சமூகத்தை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்று, எனது வியாபாரத்துக்கு பயன்படுத்தி, லாபத்தொகை வழங்கி வந்தேன். என்னிடம் வியாபாரம் செய்து வந்த ஈரோட்டை சேர்ந்த ஷேக் முகமது, நாதகவுண்டன்பாளையம் அகமது மற்றும் அவரது காசோலையை வழங்கி பணம் பெற்று வந்தார். அந்த வகையில், ேஷக் முகமது,
அகமது ஆகியோர் எனக்கு, 45 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். பல முறை அவர்களிடம் நேரில் கேட்டும், பணம் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். என்னிடம் பெற்ற பணத்தை வைத்து, அவர்கள் வியாபாரம் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து எனது தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.