ஈரோடு-ஈரோடு, பெரியவலசு, பிரசாத் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று காலை பெரியவலசு, கொத்துக்கார வீதி ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோவை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், அவருடைய, 15 வயது மகனை ஒழுங்காக படிக்கவில்லை எனக்கூறி அடித்தார். இதை கிருஷ்ணமூர்த்தி திட்டிகேட்டபோது, வெங்கடாசலமும், அவரது மற்றொரு மகனான தட்சணாமூர்த்தி சேர்ந்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில், கிருஷ்ணமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் புகாரளித்தார். தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.