ஈரோடு;ஈரோடு மாநகராட்சி ஆணையர், இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார், கோவை
மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர பொறியாளராக (கண்காணிப்பு பொறியாளர் நிலை) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சி ஆணையராக சிவகுமார் பணிபுரிந்தபோது, முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீட்டில் சில நாட்களுக்கு முன் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.