சத்தியமங்கலம்-சத்தியமங்கலம் அருகே கிணற்றில் மோட்டாரை, ஆன் செய்ய சென்ற விவசாயி, தவறி விழுந்ததில் இறந்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஓட்டக்குட்டை ரோடு, கோழிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 43; தோட்டத்து கிணற்றில் மோட்டார் போட, நேற்று மாலை சென்றார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்ததில் இறந்தார்.
சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 4 மணி நேரம் போராடி, 50 அடி ஆழ கிணற்றில் இருந்து, அவர் உடலை மீட்டனர். இறந்து போன பழனிச்சாமிக்கு ரேவதி என்ற மனைவி, ஏழு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.