தாராபுரம்,-நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக, விவசாயிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தாராபுரம், ராசிபாளையம் முதல், தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை, காங்கேயம் வட்டம் எல்லப்பாளையம் புதுாரில் இருந்து, ராசிபாளையம் வரை மின் கோபுர திட்டத்துக்காக, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, இழப்பீடு தொகை இதுவரை நிலுவையில் உள்ளது.
திட்டப்பணிகள் முடிந்து மூன்று ஆண்டுகளாக மின்சாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில், இழப்பீடு வழங்காமல் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். நிலத்துக்கான இழப்பீடு மற்றும் பயிர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறவே, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் பேச்சுவார்த்தையை ஒட்டி,
ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், போலீசார் குவிக்கப்பட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.