அவிநாசி,----கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நடத்த முன்னேற்பாடாக, திருப்பணிகள் நேற்று துவங்கின.
அவிநாசியிலுள்ள கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், 2009 ஜூனில் கும்பாபிேஷகம் நடைபெற்றது. அதன்பின், 14 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, கடந்த இரு மாதங்களுக்கு முன் அரசமரத்து விநாயகர் கோவில், மங்கலம் ரோட்டிலுள்ள ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் கோவில், கடந்த, 13ம் தேதி கருணாம்பிகை அம்மன் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலய பூஜைகள் நடைபெற்றன.நேற்று கோவிலின் திருப்பணி துவக்க விழா நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு ேஹம பூஜைகள் நடைபெற்று திருப்பணிகள் துவக்கப்பட்டன.