தாராபுரம்,-கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன், நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்ட செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனர். இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement