தர்மபுரி,-பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையினர் சார்பாக, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது.
தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஆங்கிலத்துறை சார்பாக, 'வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தி கொள்தல்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.
சேலம், பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் பூபதி, வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தங்களது, தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் மென் திறன்களை மேம்படுத்துதல், சுய அறிமுகத்தை சிறப்பாக செய்தல், கவனிக்கத்தக்க வகையிலான சுய விபர குறிப்புகளை தயார் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆங்கிலத்துறை தலைவர் கோவிந்தராஜ் உட்பட, பலர் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை, இரண்டாமாண்டு மாணவி ஆர்ச்சா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக அனைவரையும் முதலாமாண்டு மாணவர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.
தாமரைச்செல்வன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பழனிசாமி தொகுத்து வழங்கினார். மாலதி ஜனனி மற்றும் ஆராய்ச்சி மாணவி நந்தினி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.