கமுதி, : கமுதி அருகே அய்யனார்குளம் வழிவிட்ட அய்யனார் கோயில் உள்ளது.
இங்கு ராமநாதபுரம் உதவி ஆணையர் அறிக்கையின் படி திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணி வேலைகள் மேற்கொள்ள முதுகுளத்தூர் சரக ஆய்வாளர், கோயில் அர்ச்சகர் முன்னிலையில் ஆகம விதிகள், துறையின் சட்ட விதிகளை பின்பற்றி சலனமில்லாமல் சிலைகளை அகற்றாமல் பாலாலயம்செய்வதற்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழிவிட்ட அய்யனார் கோயிலில் முதுகுளத்தூர் சரக ஆய்வாளர் உதயகுமார், அறங்காவலர் கார்த்திகேயன் முன்னிலையில் குருக்கள் ராமநாதசுவாமி தலைமையில் பாலாலயம் பூஜை நடந்தது.
கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. வழிவிட்ட அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.