ஓசூர்,-ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 25 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 24 இருசக்கர வாகனங்கள் என மொத்தம், 51 வாகனங்கள் ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஏப்., 4 காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானம், ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலக பின்புறம், ஓசூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்., 1, 2ல் பார்வையிடலாம். இருசக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பணமாக, 5,000 ரூபாய், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஏப்., 2 காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணிக்குள் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் கட்டி ரசீது பெற்று கொள்ள வேண்டும்.
முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழு தொகை, ஜி.எஸ்.டி., முழுவதையும் செலுத்தி, வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விபரம் பெற, 94981 05529, 94981 75188 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.