ஊத்தங்கரை,-ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி திம்மராயசாமி கோவிலில், 74ம் ஆண்டு ராமநவமி தேர்
திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.
படப்பள்ளியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற திம்மராயசாமி கோவிலில் ராம நவமி தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். பெருமாள், மாரியம்மன், வேடியப்பன் உள்ளிட்ட உற்சவர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியை தொடர்ந்து, கணபதி ஹோமம், கொடியேற்றம் நடந்தது. கோவிந்தா, கோவிந்தா என பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் திம்மராசாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
வரும், 30 வரை அபிஷேக ஆராதனை, பாலாபிஷேகம்,
மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், குத்து விளக்கு பூஜை, திருமஞ்சன சேவை நடைபெறவுள்ளது. கொடியேற்ற விழாவில், படப்பள்ளி, பட்டக்கானுார், பெருமாள் குப்பம் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.