திருவாடானை, : ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து திருவாடானையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.
வட்டார காங்., தலைவர் கணேசன், மாநில துணை தலைவர் மரிய அருள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகை ராஜா, மீனவர் அணி மாநில செயலாளர் முத்துராக்கு, மாவட்ட விவசாய அணி செயலர் உதயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், தொண்டி நகர காங்., முன்னாள் தலைவர் வீரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாடானை நகர தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.