ராமநாதபுரம் : புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'ராயல் பின் கார்ப்'என்ற ஆன்-லைன் டிரேடிங் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து திரும்ப கிடைக்காதவர்கள் புகார் தரலாம், என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது:
விழுப்புரம் மாவட்டம் ஆலக்கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற மோகன பிரியா, அவரது அண்ணன் மனோகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து பரமக்குடி மணிநகர் ஜெயக்குார் மனைவி ஆதரம்மாளிடம் தங்களது ராயல் பின் கார்ப் நிறுவனத்தின் ஆன்-லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் மூன்று மடங்கு லாபம் ஈட்டலாம், எனக்கூறி ரூ. 1 லட்சம் வரை ஏமாற்றியுள்ளனர்.
இதே போல பலரிடம்பல லட்சம் ரூபாய் பெற்று திருப்பி தராமல் உள்ளனர். எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், சங்கரபாண்டியன்நகர் என்ற முகவரியில் உள்ள மதுரை பொருளாதார குற்றபிரிவில் நேரில் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
0452 - 264 2161 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.