ராசிபுரம்,-ராசிபுரத்தில் போலீசார் சார்பில், மாணவ,- மாணவியருக்கு கலை நிகழ்ச்சி நடந்தது.
ராசிபுரம் போலீசார் சார்பில், சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில் நகராட்சி நடுநிலை பள்ளியில் மாணவ, -மாணவியருக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பரதநாட்டியம், வெஸ்டன் ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவ, -மாணவியருக்கும், எஸ்.ஐ., தங்கம் பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.