மதுரை, : மதுரை கே.கே.நகர் பொழிலன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரையில் எக்கோ பார்க், ராஜாஜி பூங்கா பராமரிப்பின்றி உள்ளன. இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. இவைகளில் நீட்டிக் கொண்டிருக்கும் துருப்பிடித்த கம்பிகள் மக்களுக்கு காயத்தை ஏற்படுத்துகிறது.
கழிப்பறைகள் மோசமாக உள்ளன. இரு பூங்காக்களையும் புதுப்பித்து, முறையாக பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஏப்.,6ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.