திருவாடானை, : திருவாடானை அருகே மணல் குவாரியில் எல்லை மீறி மணல் அள்ளுவதை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
திருவாடானை அருகே ஓரியூரில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. நேற்று சிறுகம்பையூர் ஆற்று பகுதிக்கு சென்று அங்கு எல்லை மீறி மணல் அள்ளினர்.
இதனால் அப்பகுதி மக்கள் குவாரிக்கு திரண்டு சென்று மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். எஸ்.பி.பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு அனுமதி அளித்துஉள்ள குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மணல் அள்ள வேண்டாம் என்று குவாரி உரிமையாளர்களிடம் போலீசார் கூறினர். அதனை தொடர்ந்து ஓரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை பகுதியில் மணல் அள்ளும் பணி தொடர்ந்தது.