பரமக்குடி, : பரமக்குடி நகராட்சி கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில்நடந்தது. கமிஷனர் திருமால் செல்வம், இன்ஜீனியர் மீரா அலி முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் முருகன் தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது நகராட்சி கவுன்சிலர்கள், ஒட்டுமொத்தமாக வாறுகால் சீரமைப்பு பணி நடக்காமல் உள்ளது. நாய்கள் தொல்லை அதிகரித்துஉள்ளது. வரும் நாட்களில் முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா நடக்க உள்ளதால், வைகை ஆற்றில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினர்.
தலைவர் பேசுகையில், அனைத்து பணிகளும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பரமக்குடி நகராட்சிக்கு வர வேண்டிய வரி பாக்கிகளை வசூல் செய்ய கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.