சிக்கல், : கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிநோக்கத்தில் தமிழ்நாடு அரசு உப்புநிறுவனம் 1975ல் உருவாக்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பிற்காகவும், அதிக உப்பு உற்பத்தியை பெருக்கவும் இந்நிறுவனம் துவக்கப்பட்டது. பருவகால தொழிற்சாலை என்பதை காரணம் காட்டி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 7 நாள் மட்டுமே பணிக்கொடை வழங்கப்பட்டு வந்தது.
தொழிற்சங்கம் சார்பில் 15 நாட்கள் பணிக்கொடை வழங்ககோரி சர்க்கரை ஆலையும் பருவ கால தொழிற்சாலை என்பதை வழியுறுத்தி அரசாணையை குறிப்பிட்டு வலியுறுத்தப்பட்டது. இதனை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்நேற்று காலை சங்க தலைவர் பச்சமால் தலைமையில் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி உப்பு நிறுவன தொழிற்சங்க செயலாளர் குமார வடிவேல், பொருளாளர் முருகேசன், நிர்வாகிகள் காட்டுராஜா, அற்புதமணி, வடிவேல், போஸ் உட்பட பலர் பேசினர்.
ஜூன் முதல் வாரத்தில் வேலை நிறுத்தம் செய்து, 500 தொழிலாளர்களுடன் சென்னை தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.