ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம்தேசிய காசநோய் தடுப்பு திட்டம் சார்பில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'ஆம் நாங்கள் காசநோயை ஒழிப்போம்,' என்ற தலைப்பில் உலக காசநோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ் தலைமை வகித்தார். துணை இயக்குநர் ஜீவானந்தம் வரவேற்றார். துணை இயக்குநர்கள் அஜீத்குமார், ரவிச்சந்திரன், சிவானந்தவள்ளி, கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணபதி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். மருத்துவ அலுவலர் ரபீகா கிசாரே நன்றி கூறினார்.