ஈரோடு-ஈரோடு அருகே விவசாய தோட்டத்தில், இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகள் மீட்கப்பட்டன. வனப்பகுதியில் விடுவித்தனர்.
வெள்ளோடு, புங்கம்பாடியில், கோழிப்பண்ணை மற்றும் விவசாயம் செய்து வருபவர் சரவணன். தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்றார். மோட்டார் அறைக்கு சென்றபோது, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு மரத்தில் தொங்கி கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த சரவணன், அப்பகுதியினருக்கு தகவல் தெரிவித்தார்.
மக்கள் வந்த நிலையில், கிணற்றுக்குள் இறங்கி விட்டது. கிணற்றில் மற்றொரு பாம்பும் இருந்ததால், ஈரோட்டில் பாம்பு பிடிக்கும் இளைஞர் யுவராஜாவுக்கு தகவல் தரப்பட்டது.
அங்கு சென்ற அவர், இரு கண்ணாடி விரியன் பாம்புகளையும் லாவகமாக பிடித்தார். சாக்குப்பையில் போட்டு, ஈரோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் இரு பாம்புகளையும் வனப்பகுதியில் விடுவித்தனர்.