ஈரோடு,-கோடை வெயில் கொளுத்தும் நிலையில், தேவை அதிகரிப்பாலும், வரத்து குறைந்ததாலும், எலுமிச்சம் பழம் விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில், ஒரு எலுமிச்சம் பழம், ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 10 ரூபாயாக நேற்று விலை உயர்ந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
கோடை வெயில் அதிகரிப்பால், எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. தினமும் இரண்டு டன் எலுமிச்சம் பழம் வரத்தான நிலையில், பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.