ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் கிறிஸ்தவ மதம் குறித்து பிரசாரம் செய்தவர்களை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து கார்த்திக் பாஸ்டர், செபஸ்டின், மனோவா உட்பட 12 பேர் கொண்ட குழுவினர் டி.சுப்புலாபுரத்தில் பொதுமக்களிடம் கிறிஸ்தவ மதம் குறித்த விபரம் அடங்கிய நோட்டீஸ் கொடுத்து மத பிரசாரம் செய்தனர்.
பா.ஜ., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் கனகராஜ் உட்பட நிர்வாகிகள் இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். ஆண்டிபட்டி எஸ்.ஐ.,சவரியம்மாள்தேவி மத பிரச்சாரம் செய்த வெளியூர் நபர்களிடம் விசாரித்து வருகிறார்.