ஈரோடு,-ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், ஜாக்டோ - ஜியோ சார்பில், மனித சங்கிலி போராட்டம், நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே, பெருந்துறை சாலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய மனோகரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
நிர்வாகிகள் கோரிக்கை குறித்து பேசினர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பிருந்து, அரசு மருத்துவமனை வரை மனித சங்கிலியாக நின்று கோஷமிட்டனர். நிர்வாகிகள் சீனிவாசன், பிரகாசம், குமரவேல், தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நம்பியூர் தாசில்தார் அலுவலகம் முன், நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.