திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பல்வேறு கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்த நிலையில்,ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான பேட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் நடந்த டிராகன்ஸ் கோப்பைக்கான முதல் டிவிஷன் போட்டியில்ஜி.ஆர்.ஐ.,காந்திகிராம் அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. சபரீஸ்வரன் 40,கருப்பசாமி 46, விவேக் 47 ரன்கள், தினேஷ்குமார் 3 விக்கெட் எடுத்தனர்.சேசிங் செய்த பழநி டாமினேட்டர்ஸ்அணி 40.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து வென்றது. மதன்குமார் 71, நசீர் உசேன் 116ரன்கள் எடுத்தனர்.ஆர்.வி.எஸ்.மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டியில்,திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்.எல். அணி 23.4 ஓவரில் 108 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.அருண்பிரகாஷ்ராஜ் 44 ரன்கள் எடுத்தார். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாமுராய் அணி 19.3 ஓவர்களில் 2விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து வென்றது. அஸ்சைன் 49, ஜெகன்குமார் 45 (நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர்.
ஆர்.வி.எஸ்.மைதானத்தில் நடந்த பிரசித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிஷன் போட்டியில்,திண்டுக்கல்சாமியார் தோட்டம் அணி 22.4 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
ராம்குமார் 32ரன்கள்,கண்ணன் 3, ஜான்விக்டர் 5 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் பிளேபாய்ஸ் அணி 16.5 ஓவரில் 96ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ரமேஷ்குமார் 8 விக்கெட் எடுத்தார்.
ஸ்ரீ.வீ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் போட்டியில் திண்டுக்கல் மன்சூர் அணி 24.3 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. சசிகுமார் 36ரன்கள், பாலமுருகன் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த எரியோடு யங்ஸ்டர்ஸ் அணி 19.1 ஓவரில் 72 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. பிரசாந்த் 3, சாமிநாதன் 5 விக்கெட் எடுத்தனர்.
ஸ்ரீ.வீ.கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் போட்டியில் திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் அணி 24.3 ஓவரில் 127 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது.
பிரவீன் 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் அணி 20.3 ஓவரில் 81 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. குமரவேல் 4 விக்கெட் எடுத்தார்.
பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் போட்டியில்எரியோடு யங்ஸ்டர்ஸ் அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. பிரபு 36ரன்கள், அரவிந்த் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.அணி 22.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வென்றது. பாபு விக்னேஷ் 30ரன்கள் எடுத்தார்.பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிஷன் போட்டியில் திண்டுக்கல்ஆல்ரவுண்டர்ஸ் அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. ேஷக்அமீர் 40, மணிகண்டன் 34ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த பாப்பம்பட்டி எய்ம் ஸ்டார் அணி 20.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வென்றது.பிரபு 46, ராஜ்குமார் 50 (நாட்அவுட்) ரன்கள் எடுத்தனர்.