மதுரை, : மதுரையில் தி.மு.க., வடக்கு மாவட்டம், மேலுார் தொகுதி சார்பில் முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மேலுார் - சிவகங்கை ரோட்டில் இரட்டை மாட்டுவண்டி எல்லை பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி நாளை (மார்ச் 26) துவக்கி வைக்கிறார்.
இரண்டு பிரிவாக நடக்கும் இப்போட்டியில் பெரிய மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சத்து 70, இரண்டாம் பரிசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 70, மூன்றாம் பரிசு ரூ.1 லட்சத்து 70, ஆறுதல் பரிசாக ரூ.25,070, சாரதிகளுக்கு கொடிப்பரிசாக ரூ.5 ஆயிரம், எல்லை பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதுபோல் சிறிய மாட்டுவண்டி பந்தயமும் நடக்கிறது.
இதிலும் ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலுார் நகர் செயலாளர் முகமது யாசின் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட துணை செயலாளர்கள் வெங்கடேசன் எம்.எல்.ஏ., ரோஹிணி பொம்மத்தேவர்,இளைஞரணி துணை செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.