போடி, : போடி 17வது வார்டு பேச்சியம்மன் கோயில்தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 1400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
சர்ச்தெரு மெயின் ரோட்டில் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழா செய்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
அருகே உள்ள சுகாதார வளாகம் பழுது அடைந்துள்ளதால் மக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.
அதிகாரிகள் மெத்தனத்தால் ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே உள்ளது. நவீன வசதியுடன் கூடிய சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.