சிவகங்கை, : சிவகங்கையில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் அண்ணாமலை, பொருளாளர் முத்து, மாநில துணை தலைவர் சிவசுப்பிரமணியன், செய்தி தொடர்பாளர் சுப்புராஜ் பங்கேற்றனர்.் தலைவராகபிரேம் நசீர், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஜெகன் தேர்வாகினர். மகளிர்பிரிவு தலைவர் செல்வி, செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகி சிதம்பரம் நன்றி கூறினார்.