மதுரை, : காங்., எம்.பி.,யாக இருந்த ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, பால் ஜோசப், மீர் பாட்ஷா, மனித உரிமை மாநில பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் மாலிக், மகிளா தலைவி ஷானவாஸ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமங்கலம்: மதுரை தெற்கு மாவட்ட காங்., சார்பில் தலைவர் பாண்டி, நகர் தலைவர் சவுந்தரபாண்டி, மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.