வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-''நாட்டில் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, ஜி.பி.எஸ்., அடிப்படையிலான சுங்கக் கட்டண முறையை, ஆறு மாதங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,'' என, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
![]()
|
புதுடில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிலக கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது:
மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி வருவாய் தற்போது 40 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இது, அடுத்த 2 - -3 ஆண்டுகளில், 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயரப் போகிறது.
நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக, செயற்கைக்கோள் வாயிலாக பூமியில் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிய பயன்படும், ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப அடிப்படையில் சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆறு மாதங்களில், இந்த நடைமுறையை அமல்படுத்த உள்ளோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான துாரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடைமுறை உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
கடந்த 2018- - 19ல், சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்களாக இருந்தது.
'பாஸ்டேக்ஸ்' எனப்படும் முன்கூட்டியே பணம் கட்டி அதிலிருந்து கட்டணத்தை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, வாகனங்களின் சராசரி காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement