வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காங்கிரஸ் தலைவர்களின் திட்டமிட்ட சதி' என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
![]()
|
இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய வழக்கறிஞர்கள் பிரிவு உள்ளது. ஆனாலும், சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை. இந்த வழக்கில் ராகுலுக்கு சரியான அறிவுரை வழங்கி வழிநடத்த கட்சியில் ஒருவர் கூடவா இல்லை.
![]()
|
ராகுலை ஒழிக்க காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த சதித்திட்டத்தால் தான், அவர் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை புரிந்து கொண்டு, தனக்கு எதிராக கட்சிக்குள் குழி தோண்டுபவர் யார் என்பதை ராகுல் கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement