மதுரை ; மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் துவக்க விழாஇன்று (மார்ச்25) காலை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதல்வர் ஸ்டாலின், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமைநீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆர்.மகாதேவன், அமைச்சர்கள் ரகுபதி, தியாகராஜன், மூர்த்தி, தலைமைச் செயலர் இறையன்பு, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பங்கேற்கின்றனர்.

நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று காலை 9:00 மணிக்கு மதுரை வருகிறார். விழாவை முடித்து கொண்டு மதியம் 2:00 மணிக்கு சென்னை செல்கிறார்.