கடலுார்: கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய, இருவர் போலீசாரிடம் சிக்கினர்.
கடலுார் அடுத்த எஸ்.என். சாவடி கெடிலம் ஆறு சாலையில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில், பாதுகாப்பு குறைவு காரணமாக, கடந்த 22ம் தேதி நள்ளிரவு ஆறு சிறுவர்கள் மரத்தின் வழியாக தப்பிச் சென்றனர்.
இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவர் களை தேடி வந்தனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் நள்ளிரவில் ஊருக்கு புறப்பட்டு சென்றபோது, ரோந்து சென்ற கடலுார் புதுநகர் போலீசார் மடக்கிப் பிடித்தனர். கிள்ளை சிறுவன் மற்றும் ஆவினங்குடி சிறுவன் இருவரும் கிள்ளையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்த போது சிக்கினர்.
நான்கு பேரையும் கடலுார் புதுநகர் போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இருவரை தேடி வந்தனர்.
இதனிடையே தப்பியோடிய திருவண்ணாமலை உள்ள வீட்டிற்கு சென்ற 17 வயது சிறுவன் மற்றும் கூத்தப்பாக்கத்தில் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவனையும் போலீசார் அழைத்து வந்து, கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டனர்.