ஒரே ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

Updated : மார் 25, 2023 | Added : மார் 25, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கோவை: நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி, விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்கி, தமிழக கூட்டுறவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ், கிராமப்புறங்களில் இயங்கும், 4451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட அளவில் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின்மூலமாக, குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்பில்
13 thousand crore crop loan in a single year  ஒரே ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி பயிர்க்கடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி, விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்கி, தமிழக கூட்டுறவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.


தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ், கிராமப்புறங்களில் இயங்கும், 4451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட அளவில் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின்


மூலமாக, குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்பில் வேளாண்மை மற்றும் வேளாண் சாராத கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கைத் தாண்டி, ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.


அதாவது ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, கூடுதலாக பயிர்க்கடன் வழங்கியுள்ளது கூட்டுறவுத்துறை. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 8.33 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில், கடந்த மார்ச் 21ம் தேதி வரையிலும், தமிழகத்தில் 16 லட்சத்து 93 ஆயிரத்து 604 விவசாயிகளுக்கு, ரூ.13 ஆயிரத்து 29 கோடி அளவுக்கு, பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத்துறை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.latest tamil news


இதுவரை, பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கையும், இந்த ஆண்டில் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருப்பதாக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 452 விவசாயிகளுக்கு ரூ.1,792 கோடி வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிதியாண்டில், புதிய உறுப்பினர்களாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 216 விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களில், 2 லட்சத்து 30 ஆயிரத்து 156 விவசாயிகளுக்கு, ரூ.1,579.37 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாக் கடன் வழங்குவதிலும், தமிழக கூட்டுறவுத்துறை சாதனை படைத்துள்ளது.


2 லட்சத்து 72 ஆயிரத்து 566 விவசாயிகளுக்கு ரூ.1,258 கோடியே 86 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டு இலக்கான ரூ.1,000 கோடியை விட 25.8 சதவீதம் அதிகம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

25-மார்-202312:08:30 IST Report Abuse
ஆரூர் ரங் விவசாயிகள் என்றுதான் கடன் இல்லாமல் தொழில் செய்து முன்னேறப்🤔 போகிறார்கள்? கால்நடை ஆடு கோழி வளர்ப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, இயற்கை பூச்சிக்கொல்லி போன்ற இடுபொருள் தயாரிப்பு , மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு என விரிவாக்காமல் வெறும் பயிரிடுவது மட்டுமே செய்தால் எப்போதும் இக்கடன் பிரச்சனையில்தான் இருப்பார்கள். அளவுக்கு மீறிய செயற்கை உரப் பயன்பாடு நில வளத்தை அழித்து அத்தனையோ நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து கொண்டுள்ளது.. . செயற்கை உர இறக்குமதி நாட்டின் அன்னியச் செலாவணியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
25-மார்-202310:14:56 IST Report Abuse
அப்புசாமி பயிர்க்கடன் வாராக்கடனாக போகக்கூடாதேன்னு கவலையா இருக்கு கோவாலு. ரெண்டு தூத்தல் அதிகமா போட்டா வெள்ளம் வந்திருச்சும்பாங்க. ரெண்டு தூத்தல் குறைச்சுப் போட்டா வறட்சி வந்து பயிர்கள் கருகிடுச்சும்பாங்க. குடுக்கிற கடனோட இன்சூரன்சும் அரசே எடுத்துடணும்.
Rate this:
Cancel
அருணாசலம், சென்னை எப்படியும் 2024 தேர்தலில் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து வரி கட்டுபவர்கள் தலையில் மிளகாய் அறைப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X